நாகை, நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. 'கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம்' என அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் பெருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான பெருவிழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் சகாயராஜ் கொடியை புனிதம் செய்து வைத்த பின், கொடி ஊர்வலம் புறப்பட்டது. பின்னர், கொடிக்கம்பத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் கொடி ஏற்றினார். இந்தநிலையில், வேளாங்கண்ணி கொடியேற்ற திருவிழாவில் பட்டாசுகள் பட்டு பெரிய அளவிலான அலங்கார ஹீலியன் பலூன் வெடித்து சிதறியதால் தீ பற்றியதால் கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/a-fire-broke-out-during-the-velankanni-flag-hoisting-festival




