விருதுநகர், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் அமாவாசையையொட்டி பக்தர்கள் மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுவது வழக்கம். ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு செப். 8 முதல் 11 வரை மலையேறி பக்தர்கள் தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது. சாமி தரிசனம் காலை நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவில் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். சிறப்பு பூஜைக்கான முன்னேற்பாடு மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/devotees-throng-chathuragiri-on-the-occasion-of-the-amavasya-of-the-month-of-avani




