கனடாவின் உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை 5 மணிக்கு, எட்மன்டனின் உள்ள நானக்சர் குருத்வாராவில் தாக்குதல் நடந்துள்ளது. இந்தத் தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான ஒருவரைக் கைது செய்துள்ளது கனடா காவல்துறை. கைது செய்யப்பட்டவருக்கு 27 வயது. இவர் மீது ஏற்கெனவே வழக்கு உள்ளது. இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாளுக்கு முன்புதான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். மார்க் கார்னி`ஹார்முஸ் அமெரிக்காவின் பிராந்தியமா?' - ட்ரம்ப் புதிய அதிரடி பேச்சு கருத்தியல் ரீதியாக இந்தத் தாக்குதலைக் கைது செய்யப்பட்டவர் நடத்தியிருக்கிறாரா என்கிற கோணத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. தற்போது சம்பவம் நடந்துள்ள குருத்வாராவிற்கு அருகே உள்ள இரண்டு சீக்கிய குருத்வாராக்களுக்குக் கடந்த வாரம் மிரட்டல் அழைப்புகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது. “இன்று காலை எட்மன்டனில் உள்ள நானக்சார் குருத்வாராவில் நடந்த தாக்குதல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. காயமடைந்த இருவருக்காகவும், இந்தத் கொடூரமான சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ள ஒட்டுமொத்த சமூகத்துக்காகவும் எனது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். யாரும் தங்களின் வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பற்ற உணர்வை எதிர்கொள்ளக் கூடாது. உடனடியாகச் செயல்பட்ட எட்மன்டன் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/edmonton-gurdwara-attack-two-injured-27-year-old-arrested




