புதுடெல்லி: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டம் அறிவித்துள்ளது ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் 11 நிலையங்களில் பயணிகள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறுஅறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜன்பத், படேல் சவுக், சென்ட்ரல் செக்ரட்டேரியட், ராஜீவ் சவுக், சேவா தீர்த், மண்டி ஹவுஸ், லோக் கல்யாண் மார்க், ஐ.என்.ஏ., சாவ்ரி பஜார், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க் மற்றும் நியூ டெல்லி ஆகிய 11 மெட்ரோ நிலையங்களில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ், நியூ டெல்லி மற்றும் சென்ட்ரல் செக்ரட்டேரியட் ஆகிய நிலையங்களில் மெட்ரோ ரெயில் பாதைகளை மாற்றுவதற்கான ‘இன்டர்சேஞ்ச்’ வசதி தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ள போராட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ள நிலையில், அப்பகுதியில் கூடுதல் போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் 3,000 முதல் 4,000 பேர் போராட்டத்தில் பங்கேற்கலாம் எனக்கூறப்படுவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/jantar-mantar-protest-delhi-metro-shuts-entry-and-exit-at-11-stations




