தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க. பிளவை நோக்கி சென்றது. இந்தத் தேர்தலில் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டதால், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது கடும் அதிருப்தி நிலவி வருகிறது. அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்கள் இதுவரை 6 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். எடப்பாடிக்கு எதிராக சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் தொடர்ந்து போர்க்கொடி தூக்கி வருகிறார்கள். இதனால், இருவரின் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டார்த்தில் நிலவி வருகிறது. இந்த நிலையில், திண்டிவனத்தில் உள்ள தனது இல்லத்தில் மயிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சிவி சண்முகம் திடீர் ஆலோசனை நடத்தினார். அப்போது, சி.வி.சண்முகம் வீட்டுக்கு த.வெ.க கொடி கட்டிய காரில் வந்த நிர்வாகிகளும் ஆலோசனையில் பங்கேற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தனது ஆதரவாளர்கள் உடனான ஆலோசனையை நிறைவு செய்த சி.வி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 'நான் அ.தி.மு.க-வில் இருக்கிறேனா? இல்லையா என நீங்கள் கேட்க வருகிறீர்கள். நான் அ.தி.மு.க-வில் இருக்கிறேனா? இல்லையா என நீங்கள் எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அ.தி.மு.க-வில் நான் இருக்கிறேனா? இல்லையா? என எனக்கே தெரியவில்லை; எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/i-myself-do-not-know-whether-i-am-in-the-aiadmk-or-not-says-cv-shanmugam




