பெங்களூரு, துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி வைபவ் சூர்யவன்ஷி அசத்தியுள்ளார். அபார வெற்றி துலீப் டிராபி காலிறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டல அணிகள் மோதின. பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆப் எக்சலன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் கிழக்கு மண்டல அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் ஏமாற்றம் கிழக்கு மண்டல அணியின் துணைக் கேப்டனாக களமிறங்கிய 15 வயதான இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, பேட்டிங்கில் ஏமாற்றம் அளித்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களமிறங்கிய அவர், 6 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் மட்டுமே எடுத்து மணிப்பூர் வேகப்பந்து வீச்சாளர் பிஷ்வோர்ஜித் கொவுஜாமின் பந்தில் ஆட்டமிழந்தார். இருப்பினும், சுதீப் குமார் கராமி 146 ரன்களும், ஷாபாஸ் அகமது 167 ரன்களும் விளாசியதால் கிழக்கு மண்டல அணி முதல் இன்னிங்ஸில் 467 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் மிரட்டல் இதையடுத்து களமிறங்கிய வடகிழக்கு மண்டல அணியை முதல் இன்னிங்ஸில் 111 ரன்களுக்கு கிழக்கு மண்டல அணி சுருட்டியது. தொடர்ந்து 'பாலோ-ஆன்' கொடுக்கப்பட்ட நிலையில், வடகிழக்கு மண்டல அணி இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் கிழக்கு மண்டல அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் வைபவ் சூரியவன்ஷியும் முக்கிய பங்காற்றினார். தனது சுழற்பந்து வீச்சில் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்திய அவர், பீல்டிங்கிலும் 2 சிறப்பான கேட்சுகளை பிடித்து அசத்தினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/vaibhav-suryavanshi-impresses-with-the-ball-too-takes-two-wickets-in-a-single-over-in-the-duleep-trophy




