சென்னை, இந்திய ராணுவ தென்பகுதி புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் தனது பணிகளை சென்னை வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார். லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர் பொறுப்பேற்பு லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இந்திய ராணுவத்தின் தென்பகுதி தளபதியாக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். அவர் தனது பணிகளை சென்னை வெற்றிப் போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தொடங்கினார். 1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரி டிசம்பர் 1989-ல் சமிக்ஞை பிரிவில் அதிகாரியாகப் பணியில் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். இவர் நீலகிரி மாவட்டம் வெலிங்டனிலுள்ள பாதுகாப்பு சேவை அலுவலர் கல்லூரி, தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பயிற்சிகளை முடித்துள்ளார். இவர் கான்பூர் ஐஐடி-யில் கணினி அறிவியலில் தொழில்நுட்ப முதுகலைப் பட்டமும், அமெரிக்காவின் கடற்படை முதுகலை பள்ளியில் தகவல் போர்முறை பிரிவில் அறிவியல் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவம் பல்வேறு நிலப்பரப்புகளிலும் பணியாற்றிய அனுபவத்தை இவர் பெற்றுள்ளார். இவர் கிழக்கு மண்டலத்தில் மலைப்பகுதிப்பிரிவு சிக்னல் படைப்பிரிவு, சிறப்பு உளவுப் பிரிவு ஆகியவற்றிற்குத் தலைமை தாங்கியுள்ளார். இவர் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநரகம், தகவல் அமைப்புகளுக்கான தலைமை இயக்குநரகம் மற்றும் கிழக்கு மண்டல தலைமையகம்; திட்ட மேலாண்மை அமைப்பு, தந்திரோபாய தகவல் தொடர்பு அமைப்பு; லடாக் பிராந்தியத்தில் உள்ள படைப்பிரிவு தலைமையகத்தின் தலைமை சிக்னல் அதிகாரி; கிழக்கு கமாண்ட் தலைமை சிக்னல் அதிகாரி; ராணுவத் தலைமையகத்தில் நிர்வாகம் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கூடுதல் தலைமை இயக்குநர்; மற்றும் நிதித் திட்டமிடல் தலைமை இயக்குநர் போன்ற பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மேலும், மௌவ் நகரில் உள்ள ராணுவத் தொலைத்தொடர்பு பொறியியல் கல்லூரி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் அலுவலர் கல்லூரி ஆகியவற்றில் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2023-ல் சேனா பதக்கம் லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், அவரது சிறப்பான பணிக்காக 2023 ஜனவரி 26 அன்று 'சேனா பதக்கம்' மற்றும் 2025 ஜனவரி 26 அன்று 'அதி விசிஷ்ட சேவா பதக்கம்' ஆகியவற்றைப் பெற்றார். இவர் 2024 டிசம்பர் 1 முதல் சிக்னல் படைப்பிரிவின் 72-வது கர்னல் கமாண்டன்டாக நியமிக்கப்பட்டார். இந்திய ராணுவ தென்பகுதி தலைவர் என்ற முறையில், லெப்டினன்ட் ஜெனரல் உல்லாஸ் கிர்பேகர், இப்பகுதியில் செயல்பாட்டு, தளவாட, நிர்வாக மற்றும் முன்னாள் வீரர்களின் நலன் சார்ந்த பொறுப்புகளை மேற்பார்வையிடுவார். அத்துடன் சிவில் நிர்வாகத்துடனும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடனும் ராணுவத்தின் தொடர்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் வளர்ந்து வரும் பாதுகாப்புத் தொழில்துறையின் நலன்களுக்கான நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/lieutenant-general-ullah-kirbekar-takes-charge-as-the-new-commander-of-the-indian-armys-southern-command




