ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘சிக்மா’ படத்தின் 4-வது பாடலான ‘சுலோச்சனா’ பாடல் வெளியானது. முதல்-அமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் முதல்முறையாக இயக்குநராக ‘சிக்மா’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நாயகனாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பரியா அப்துல்லா ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா ஒரு துள்ளலான பாடலில் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுகிறார். சென்னையில் சிக்மா திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஜேசன் சஞ்சய், என்னோட அம்மாவுக்கு நன்றி.என்னோட அப்பா இன்னைக்கு முதல் அமைச்சர்.அவருக்கு நன்றி. என்னோட தங்கை திவ்யா சாஷா அவளுக்கும் ரொம்ப நன்றி” என்றார். ஜேசன் சஞ்சய், தனது தந்தை விஜய்க்கு நன்றி தெரிவித்தபோது ஆடிட்டோரியத்தில் இருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. பாடல்கள் வைரல் ‘சிக்மா’ படத்தின் முதல் பாடலான ‘சிக்மா ஸ்டைல்’ வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘அய்யய்யோ அம்மாடி’ வெளியாகி வைரலானது. விவேக் வரிகளில் உருவாகியுள்ள பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். இப்படத்தின் 3வது பாடலான‘ரேஜ் ஆப் சிக்மா’ சமீபத்தில் வெளியானது. ‘சிக்மா’ படத்தின் 4வது பாடல் இந்நிலையில், ‘சிக்மா’ படத்தின் 4வது பாடலான ‘சுலோச்சனா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சூப்பர் சுப்பு வரிகளில் சான்வி சுதீப் பாடியுள்ளார். இப்பாடலில் சிறப்புத் தோற்றத்தில் கேத்ரின் தெரசா நடனமாடியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/jason-sanjays-sigma-film-4th-song-out




