இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்காவை சேர்ந்த அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அந்த கூட்டமைப்பு 'இந்தியாவின் அணு ஆயுதங்கள் - 2026' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், அணுசக்தி தகவல் திட்டத்தின் இயக்குனர் ஹான்ஸ் கிறிஸ்டென்சன் தெரிவித்துள்ள தகவலில் "அணுசக்தி திறன் தொடர்பான பொதுத் தகவல்களின் அடிப்படையில், இந்தியா சுமார் 190 அணு ஆயுதங்களைத் தயாரித்திருக்கலாம் என்று மதிப்பிடுகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவை உலகின் மிகப்பெரிய அணுசக்தி நாடுகளில் ஒன்றாக இணைந்துள்ளது. இருப்பினும் அதன் ஆயுதங்கள் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை விட மிகக் குறைவாகவே உள்ளது. இந்தியாவின் கையிருப்பு விரைவில் பிரிட்டனின் மதிப்பிடப்பட்ட 225 அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை முறியடிக்கக்கூடும். ஏனெனில் புது டெல்லி தொடர்ந்து புதிய அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளை உருவாக்கி வருகிறது. அரசாங்க தரவுகள், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் வணிக ரீதியிலான செயற்கைகோள் புகைப்படங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தே இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா ரகசியமாக வைத்திருக்கும் திட்டங்களை, வெளியில் கிடைக்கும் பொதுவான ஆதாரங்களை வைத்தே நிபுணர்கள் கண்டறிகின்றனர். இந்தியா 140 முதல் 225 அணு ஆயுதங்களுக்கு போதுமான புளூட்டோனியத்தை தயாரித்திருக்கலாம் என்றும், அதன் மூலம் 190 அணுகுண்டுகள் வரை தயாரித்து இருக்கலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. நடப்பு ஆண்டின் முற்பகுதியில், இந்தியா சுமார் 730 கிலோ ஆயுதம் தரக்கூடிய புளூட்டோனியத்தை உற்பத்தி செய்துள்ளதாக சர்வதேச குழு மதிப்பிட்டுள்ளது. ஒரு அணுகுண்டுக்கு தோராயமாக 4 கிலோ புளூட்டோனியம் தேவையாகும். அதன் அடிப்படையில் பார்த்தால் 140 முதல் 225 அணுகுண்டுகளை தயாரிக்க முடியும். அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பு அறிக்கையின்படி, புதிய ஏவுகணைகளுக்கான குறைந்தபட்சம் 30 அணு ஆயுதங்கள் அதிகரித்துள்ளன. எனவே ஏற்கனவே இருக்கும் 160 அணு ஆயுதங்களுடன் தற்போது இருப்பதையும் சேர்த்து மொத்தம் 190 ஆக உள்ளது. இந்தியாவிடம் இரண்டு விமானம் தாங்கிய கப்பல்கள், ஆறு தரை அடிப்படையிலான பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஒரு கடல் சார்ந்த ஏவுகணை இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/overtaking-pakistan-us-states-india-possesses-190-nuclear-weapons




