மதுரை, தமிழகத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையில், 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்தது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்று, அந்த ஆஸ்பத்திரியில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை முதல்-அமைச்சர் விஜய் அணிவித்தார். மேலும் அங்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் மற்றும் தாய்மார்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அங்கிருந்து மகாத்மா காந்தி அருங்காட்சியகத்துக்கு முதல்- அமைச்சர் விஜய் சென்றார். முதலில் அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்- அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார். பின்னர் அருங்காட்சியகத்திற்குள் உள்ளே சென்று பார்வையிட்டார். அப்போது மகாத்மா காந்தியின் பொருட்களை பார்வையிட்டார். தொடர்ந்து மகாத்மா காந்தியின் ஆவணப்படத்தை முதல்-அமைச்சர் கண்டு ரசித்தார். மேலும் அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து அங்குள்ள வருகை பதிவேட்டில் தன் பெயரை முதல்-அமைச்சர் விஜய் பதிவு செய்தார். தொடர்ந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டபோது காந்தியின் உபதேசங்களில் ஒன்றான, 'நாம் உலகில் பார்க்க விரும்பும் மாற்றம். முதலில் நம்மிடம் நிகழ வேண்டும்' என்கிற வாசகத்தை நிர்வாகி ஒருவர் காண்பித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/gandhi-museum-renovated-chief-minister-vijay-inaugurates-it




