புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பிசியோதெரபிஸ்ட் கமலேஷ் ஜெயின், தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அணியில் தொடர்ச்சியாக வீரர்கள் காயமடைந்துவரும் நிலையில், அவரது பணிக்காலம் தொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ அளவில் மறுஆய்வு நடைபெற்று வந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. கமலேஷ் ஜெயின் இந்திய அணியின் முக்கிய மருத்துவக் குழுவில் நீண்டகாலமாக பணியாற்றி வந்தவர். இந்திய அணியின் வீரர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அவர், காயம், மறுவாழ்வு மற்றும் போட்டிக்கான உடற்தகுதி ஆகியவற்றை கண்காணிக்கும் பொறுப்பில் இருந்தார்.கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால் கமலேஷ் ஜெயின் ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/indian-cricket-team-physiotherapist-kamalesh-jain-resigns




