புதுடெல்லி, இமாச்சல பிரதேசம் மற்றும் லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம் இமாச்சல பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பா பகுதியில் அதிகாலை 3.40 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 32.925 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.145 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. லடாக்கில் நிலநடுக்கம் இதனையடுத்து, லடாக்கின் லே லடாக் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.25 மணியளவில் ரிக்டர் அளவில் 3.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 120 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 36.700 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 74.343 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த எந்தவித தகவலும் உடனடியாக வெளியாக வில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/consecutive-earthquakes-in-himachal-pradesh-and-ladakh




