சென்னை, 8 அணிகள் இடையிலான 10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதன் முதல் கட்ட ஆட்டங்கள் திண்டுக்கல் நத்தத்தில் நடந்தது. லீக் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் ஆகிய அணிகள் புள்ளி பட்டியலில் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. பிளே ஆப் சுற்று முடிவில் மதுரை பாந்தர்ஸ் - கோவை கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. இந்த நிலையில் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப் போட்டி இன்று நடந்து வருகிறது. இதில் அனிருத் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ்- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ராதாகிருஷ்ணன் 13 ரன்னிலும், லோகேஸ்வர் 11 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதன் பின்னர் பாலசுப்பிரமணியனுடன் கேப்டன் சித்தார்த் இணைந்து ரன்குவிப்பில் ஈடுபட்டனர். பாலசுப்பிரமணியன் 39 ரன்களின் ஆட்டமிழக்க, மறுமுனையில் சித்தார்த் அபாரமாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் கோவை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது. மதுரை அணி தரப்பில் சரவணன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டம் வெல்லலாம் என்ற இலக்கை நோக்கி மதுரை அணி பேட்டிங் செய்ய உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-final-kovai-kings-set-a-target-of-183-runs-for-madurai




