புதுடெல்லி, 'நீட்' இளங்கலை-2026 தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான (சி.பி.ஐ.) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 13 பேரை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றப்பத்திரிகையில், குற்றச்சதி, மோசடி, நம்பிக்கை மோசடி, ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட இந்திய நியாய சன்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழும், ஊழல் தடுப்புச் சட் டம் மற்றும் பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்கும் சட்டம் ஆகியவற்றின் கீழும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. இந்த வழக்கில் 360 சாட்சிகள், 422 ஆவணங்கள் மற் றும் 43 முக்கிய பொருள் ஆதாரங்கள் குற்றப்பத்திரிகையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/cbi-files-chargesheet-in-neet-exam-question-paper-leak-case-hearing-today




