சென்னை, தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (feeble Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, நீலகிரி, ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-in-13-districts-until-7-pm



