ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் பைய்யாரம் கிராமத்தை சேர்ந்தவர் அபிரூப் (வயது 20). இவர் ஐதராபாத் கச்சி பவுலி பகுதியில் உள்ள ஒரு தொழிற்கல்வி மையத்தில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சிறிது காலமாக ஆரோக்கியப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அபிரூப், படிப்பதிலும் மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபிரூப், கல்வி மையத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சக மாணவர்கள் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/student-commits-suicide-by-jumping-from-the-6th-floor




