நீலகிரி மாவட்டம் ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் நேற்று மாலை வந்த ஒரு காரை காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி சோதனை செய்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்த கடநாடு அரசுப்பள்ளி தலைமையாசிரியர் சீனிவாசன் என்பவர் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வாகனம் இயக்கியது தொடர்பாக வழக்கு பதிவு செய்கிறோம் என காவல்துறையினர், நடுரோட்டில் அவரின் சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் காவலர் ஒருவரும் சாலையில் வைத்தே ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கன்னத்தில் அறைந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, காவல்துறையினர் கூட்டாகச் சேர்ந்து தலைமையாசிரியரை காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. காவல்துறையினர் இது குறித்து காவல்துறையினர், " மதுபோதையில் வந்த இந்த நபர் காரில் இருந்து இறங்கி தப்பிச்செல்ல முயற்சி செய்ததால் போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். ஆத்திரமடைந்த அவர் சீருடையில் இருந்த போலீஸ்காரரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து போலீஸ்காரரும் அவரை மீண்டும் தாக்கி, மற்ற போலீஸார் உதவியுடன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் போலீஸ்காரரை தாக்கியது, கடநாடு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சீனிவாசன் (வயது 57) என்பதும், மது போதையில் வாகனம் ஓட்டி விபத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/crime/ooty-town-traffic-police-head-master-attack-news




