மும்பை, இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கியது. 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் 20-வது சீசனாகும்.இதையொட்டி, ஐபிஎல் 20-வது சீசனை சிறப்பான முறையில் கொண்டாட பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்த முடிவு மும்பையில் நேற்று நடைபெற்ற பிசிசிஐ-யின் 95-வது பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்டது. 20 ஆண்டுகால ஐபிஎல் பயணத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது. ஐபிஎல் தொடரின் 20-வது பதிப்பை மிகப்பெரிய அளவில் கொண்டாடுவதற்கான திட்டங்களை பிசிசிஐ தற்போது ஆராய்ந்து வருகிறது. இருப்பினும், கொண்டாட்டங்கள் குறித்த முழுமையான விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும், அனைத்து ஐபிஎல் மைதானங்களிலும் தொடக்க நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடர் 20-வது ஆண்டை எட்ட உள்ள நிலையில், கடந்த காலங்களில் தொடரில் இடம்பெற்ற முக்கிய தருணங்கள், சாதனைகள் மற்றும் முன்னணி வீரர்களை சிறப்பிக்கும் வகையிலான நிகழ்ச்சிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/20th-ipl-season-bcci-gears-up-for-a-grand-celebration



