விருதுநகர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது நிதியில் இருந்து வளர்ச்சி பணிகள் செய்யாமலேயே நிதியை கையாடல் செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து அதிகாரிகள் கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கலெக்டர் சரண்யா அறி விசாரணை மேற்கொண்டார். இந்தநிலையில் ஊராட்சி நிதியை கையாடல் செய்து, கடமை தவறி நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் காஜாமைதீன் பந்தே நவாஸ், இதற்கு உடந்தையாக இருந்த உதவி பொறியாளர் அர்ஜூனன், துணை வட் டார வளர்ச்சி அலுவலர் துரைக்கண்ணன், கணக்காளர் சரவண குமார், உதவியாளர் பரகத் பாபிதா பானு ஆகியோரை கலெக்டர் சரண்யா அறி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/misappropriation-of-panchayat-union-funds-5-persons-including-the-block-development-officer-suspended




