சென்னை, தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று காலையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.1,440 குறைந்து, ரூ.1,12,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. காலையில் குறைந்த தங்கம் விலை, மாலையில் உயர்ந்தது. நேற்று மாலையில் சவரனுக்கு ரூ.1,280-ம், கிராமுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rises-further-whats-todays-rate




