ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தினம் தினம், 'போர் தீவிரமடைகிறது.', 'ஈரான் பேச்சுவார்த்தை நடத்த கெஞ்சுகிறார்கள்', 'விரைவில் போர் முடிந்துவிடும்' என்று ஒவ்வொன்றைக் கூறி வருகிறார். ஆனால், இது எதுவும் நடந்ததாக தெரியவில்லை. ஈரானும் அமெரிக்காவிற்குப் பிடிக்கொடுப்பதாக இல்லை. ட்ரம்ப் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினால், ஈரானோ வெறும் செய்தி பரிமாற்றம் தான் நடக்கிறது என்று கூறுகிறது. அராக்சியின் பதிவு‘ஹார்முஸ் எங்கள் கட்டுப்பாட்டில்’ ட்ரம்ப் சொல்கிறார்; இருந்தும், அங்கே போக்குவரத்தில் சிக்கல்! அது மாதிரி, ஹார்முஸ் நீர்ச்சந்தியை இன்னும் அதன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கிறது ஈரான். ஆனால், ட்ரம்போ, 'ஹார்முஸ் நீர்ச்சந்தி அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது' என்று கூறுகிறார். இதற்கு பதிலடி தருவது போல, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது. "அமெரிக்கா தனது உளவுத்துறை தோல்விகளால் நீண்டகாலமாகவே தவறான கணக்குகளைப் போட்டு வருகிறது. அதற்குச் சிறந்த உதாரணம்: ஈரான் மீதான போர். இப்போது, ஹார்முஸ் நீர்ச்சந்தி விஷயத்தில் அதைவிடப் பெரியதொரு தவறான கணக்கீட்டைச் செய்திருக்கிறது. போலிச் செய்திகளை விட மிகவும் ஆபத்தானது போலி உளவுத்துறை அறிக்கைகள்தான். எச்சரிக்கையாக இருங்கள். அல்லாஹ் மிக பெரியவன். பூமியில் உள்ள எந்தவொரு சக்தியை விடவும் அவன் மிகவும் சக்திவாய்ந்தவன். நாங்கள் அல்லாஹ்வையே முழுமையாக நம்புகிறோம்." Tata Sons-ன் அடுத்த தலைவர் 'இவரா?' - அடிபடும் பேச்சுகள்; தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவார்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/iran-hits-back-at-trump-over-us-claims-on-strait-of-hormuz




