'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் இன்று (ஜூலை.29) நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார். நித்யானந்த் ராய் இதன் மூலம் வந்தே மாதரம் பாடலை வேண்டும் என்றே தடுப்பது அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இந்த மசோதாவின் மூலம் குற்றமாக கருதப்படும். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்த சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், இந்த மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் இந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசியக்கொடி இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டால், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்ற பிறகு சட்டமாகும். இந்த மசோதா மூலம் 'வந்தே மாதரம்' தேசியக் கொடி, தேசியக் கீதத்துக்கு இணையான அந்தஸ்தை பெறுகிறது. 'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கவும் இந்த மசோதா வழிவகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/rajya-sabha-clears-bill-to-make-insult-to-vande-mataram-criminal-offence



