சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார். Prakash Raj அந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேசுகையில், "இப்போ மோடி என்னென்னவோ ரீல்ஸ் பண்றாரு. நான் இந்த தலைமுறையை முழுசா நம்புறேன். ஏன்னா, இவர்கள் வழக்கமான இன்னொரு அரசியல்வாதி இல்லை. பாபாசாகேப் அம்பேத்கர் நமக்குக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டத்தை ஒழுங்கா படிச்சு, அதை நாம உணர்ந்தாலே போதும். இந்தியாவில் அரசியல் செய்ய வேண்டியதே மக்கள் நாம்தான். நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் நமக்காக வேலை மட்டும்தான் பார்க்கணும். தேர்ந்தெடுக்கப்பட்டவன் அரசியல் பண்ணிக்கிட்டு இருக்கான், நாம அவனுக்காக வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். முதல்ல இந்த நிலைமையை மாத்தணும். நாம யாரும் அரசியல்வாதி ஆக வேண்டியதில்லை, ஒரு கட்சியைக் ஆரம்பிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு சராசரி குடிமகனா, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியை நிமிர்த்தி கேள்வி கேட்கிற அதிகாரமும் துணிவும் மக்களுக்கு இருந்தாலே போதும். 'வேலை செய்யலைன்னா உன்னை ஆட்சியிலிருந்து இறக்கிடுவோம்' என்கிற பயத்தை அவனுக்கு உணர்த்தினால் மட்டுமே போதும். Prakash Raj அதைத்தான் நாம செய்யணும், அதைத்தான் இன்னைக்கு இளைஞர்கள் செய்திருக்காங்க. நாம இப்போ ரொம்ப யோசிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கோம். பாஜகவின் இந்த பாசிச மன்னர் ஆட்சி இன்னும் மூணு வருஷத்தில் கண்டிப்பா இறங்கும். ஆனா இந்திய அரசியலின் இயல்பை நாம புரிஞ்சுக்கணும். இங்க எதிர்க்கட்சி ஜெயிக்காது, ஆளுங்கட்சிதான் தன் தவறுகளால் கீழே விழும். இது ஒரு கேன்சர் மாதிரி, அசிங்கமான நோய். இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம். அப்புறம் மத்த குறைகளையும் ஒவ்வொன்றாகச் சரி பண்ணுவோம்" எனப் பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/governance/prakash-raj-speech-chennai-constitution-protection-conference-modi-bjp



