நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 1,538 காலிப்பணியிடங்கள் நிரப்பபடுகின்றன. டிகிரி முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய முழு விவரங்கள் பினவருமாறு பணியிடங்கள்: ஜூனியர் அசோசியேட்ஸ் (வாடிக்கையாளர் உதவி & சேல்ஸ்) - மொத்தம் 1,538 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 68 காலியிடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி போதும் + விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி தெரிந்து இருக்க வேண்டும். வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02.04.1998 க்கு முன்பாகவோ 01.04.2006 தேதிக்கு பிறகோ பிறந்தவராக இருத்தல் கூடாது. அரசு விதிகளின்படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும். சம்பளம்: மாதம் ரூ.24,050 முதல் 64,480 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2026 கூடுதல் விவரங்களுக்கு: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/education-and-employment/jobs-at-sbi-1538-vacancies-how-to-apply




