இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசிய உரையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு. அப்பாவு, "சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியத்திற்குப் பதிலளித்த முதல்வர். தமிழக மாணவ, மாணவிகளைச் சீரழித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கடத்தி விற்பனை செய்து வரும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் எந்தப் பதிலும் சொல்லாமல், இது 100 நாள்களில் உருவானதல்ல பல ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிறது என்று பொறுப்பற்ற பதில் சொல்லி கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணைநிற்கும் செயலில் ஈடுபட்டுவிட்டீர்களே CM sir? விஜய் உரைசென்னையில் ஒரே நாளில் இரு கொலைகள்: "இது இந்திய அளவில் தலைகுனிவை." - நயினார் நாகேந்திரன் காட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகப் பதில் சொல்ல முடியாமல், 50 ஆண்டுகளுக்கு முன் பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட 'சர்காரியா கமிஷன்' அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிக்க வெட்கமாக இல்லையா CM sir? சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்த மக்கள் பிரச்னைக்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் திமுக மேடை பேச்சிகளை எடுத்து பதிலளிக்கும் முதல்வரே! உங்கள் அமைச்சரவை பெண் உறுப்பினர் அலைபேசி மூலம் "லட்சுமணன்" என்பவரை ஜட்டியோடு உட்கார வைத்து அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே CM sir? தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்து வருகின்ற கொலை கொள்ளை போதைப் பொருள் விற்பனை பாலியல் சீண்டல் போன்ற வழக்குகள் மீது உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்று தெரிவிப்பதை விட்டுவிட்டு ்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியத்திற்கு பதிலளித்த முதல்வர். தமிழக மாணவ, மாணவிகளை சீரழித்து வரும் போதை பொருள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கடத்தி விற்பனை செய்து வரும் ்சா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்தவும் எந்த பதிலும்… — M Appavu - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@AppavuexSpeaker) September 7, 2026 FIR பதிவு செய்து இருக்கிறோம் என அலட்சியமாகச் சொன்ன பதில் மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா CM sir? நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது பற்றி எந்தப் பதிலும் பேசாமல் அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக் கொடுத்ததை சினிமா அங்க அசைவுகளோடு (நடித்து) வாசித்து பொதுக் கூட்டத்தில் நான்காம் தர மேடைப் பேச்சாளரைப் போன்று தரம் தாழ்ந்து பேசியது சட்டமன்றத்தின் மாண்பைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டதே CM Sir?" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். KN Nehru FIR: "அமைச்சராக இருந்தப்போது Party Fund ஆக ரூ.1,020 கோடி பெற்றார்" - லஞ்ச ஒழிப்புத் துறை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/appavu-slams-vijay-over-assembly-speech-on-law-and-order



