சென்னை, தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் சவரனுக்கு ரூ.400-ம், கிராமுக்கு ரூ.50-ம் குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும், ஒரு கிராம் ரூ.13,100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,05,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-price-rise-what-is-todays-situation




