இஸ்ரோவின் இலக்கு இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் அமைப்பதற்கும், 2040-ம் ஆண்டுக்குள் இந்திய ராக்கெட் மூலம் இந்தியரை நிலவுக்கு அனுப்புவதற்கும் இஸ்ரோ இலக்கு நிர்ணயித்து தீவிரமாக பணியாற்றி வருகிறது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-இந்தியாவை வருகிற 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற்றுவதற்கு கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி அமைப்புகளுக்கு இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம். ஆராய்ச்சிகள் வெறும் கட்டுரைகளாக மட்டும் நின்றுவிடாமல், சமூகத்திற்கு பயன் தரும் தொழில்நுட்பங்களாகவும், காப்புரிமைகளாகவும், தயாரிப்புகளாகவும் மாற வேண்டும். மீனவர்களுக்கு வருமானம் இஸ்ரோவின் பங்களிப்புகளாக, தொலைதொடர்பு, வானிலை முன்னறி விப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர் வளங்கள் மற் றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஆதரவளித்து வருகிறது.குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவியுள்ளது.தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உள்நாட் டிலேயே 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. மீனவர்களுக்கு வருமானம் இஸ்ரோவின் பங்களிப்புகளாக, தொலைதொடர்பு, வானிலை முன்னறி விப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், மீன்வளம், நீர் வளங்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இஸ்ரோவின் செயற்கைக்கோள்கள் ஆதரவளித்து வருகிறது.குறிப்பாக செயற்கைக்கோள் மூலம் வழங்கப்படும் ஆலோசனைகள் மீனவர்களின் வருமானத்தை மேம்படுத்த உதவியுள்ளது.தொடக்கத்தில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்தியா உள்நாட் டிலேயே 'கிரையோஜெனிக்' தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. 104 செயற்கைக்கோள் ஏவுதல் திறன்களுக்காக சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதை யும் அவர் நினைவுகூர்ந்தார். 'சந்திரயான்' திட்டம் மற்றும் ஒரே பயணத் தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது போன்றவை இஸ்ரோவின் முக்கிய மைல்கற்கள் ஆகும்.மாணவர்களுக்கு கூட்டு ஆராய்ச்சி, பயிற்சிகள் மற்றும் புதிய கண்டுபிடிப் புகளை உருவாக்குவதற்கான அதிக வாய்ப்புகளை இஸ்ரோ வழங்கும்’ இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/humans-will-go-to-the-moon-by-2040-isro-chairman-sets-target




