ஒசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மாற்றம் இன்றி வினாடிக்கு 1,057 கனஅடி நீர்வரத்து காணப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி அதே அளவு தண்ணீர் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. கெலவரப்பள்ளி அணையின் உச்ச நீர்மட்டமான 44.28 அடியில், தற்போதைய நீர்மட்டம் 42.15 அடியாக உள்ளது. விவசாயிகள் அதிர்ச்சி இந்த நிலையில், மழை இல்லாத இக்காலங்களிலும் அதிகளவிலான ரசாயன கலவைகளுடன் குவியல், குவியலாக நுரை பொங்க நீர் செல்வதால் அணை முன்பகுதியில் நுரைமண்டலமாக மட்டுமே காட்சியளிக்கிறது. நுரைகள் காற்றில் பறந்துசென்று அப்பகுதியில் ஆங்காங்கே விழுகின்றன. மழைக்காலங்களில் ஆற்றில் நுரைபொங்கி செல்வது வழக்கம் என்றாலும், மழை இல்லாதபோ தும் ஆற்றில் தொடர்ந்து 2 மாதங்களாக நுரை பொங்கி செல்வது விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/water-in-kelavarapalli-dam-has-been-foaming-for-2-months-farmers-are-shocked




