புதுடெல்லி, நேபாளத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்குப் பிறகு, சிக்கிமின் பனியாற்று ஏரிகள் அடுத்த பெரிய அச்சுறுத்தலாக மாறி உள்ளது. பனிப்பாறை ஏரிகள் நேபாளத்தில் பனிப்பாறை தொடர்பான பேரழிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோர் காணாமலும் போயுள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தின் மீது கவனம் திரும்பியுள்ளது. இதில் 16 ஏரிகள் அதிக ஆபத்துக்குள்ளானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் அம்மாநில அரசு கண்காணிப்பு, முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகள் மற்றும் பாதிப்புத் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேபாளத்தில் பனிப்பாறை வெடிப்பால் ஏற்பட்ட பெருவெள்ள பேரழிவைத் தொடர்ந்து, நம் நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சிக்கிமில் பனிப்பாறை ஏரிகளால் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. 40 பனிப்பாறை ஏரிகள் இதுதொடர்பாக செய்திக்குறிப்பில், “சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகள் அபாயக் கட்டத்தில் உள்ளன. இதில் ஏழு ஏரிகள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய, 16 ஏரிகளில், 13 ஏரிகள் விரிவான அறிவியல் மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், பெரும்பாலானவை 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. ஏரிகளின் ஆழம், நீளம், நீரின் அளவு, பனிப்பாறைகளின் தன்மை, நிலச்சரிவுகளினால் ஏற்படும் அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்று அதில் கூறப்பட்டுள்ளது. சிக்கிம் அரசு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, அபாயத்தை குறைக்க ஏரிகளின் நீர்மட்டத்தை குறைக்க சிக்கிம் அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, சிக்கிம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் முதன்மை செயலர் சந்தீப் தாம்பே கூறுகையில், “அபாயகரமானதாக கூறப்படும 16 ஏரிகளில், வெள்ள ஆபத்தை எச்சரிக்கும் முன்னெச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேசமயம், முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளை அரசு விரிவுப்படுத்தி வருகிறது. ஷாகோ சூ, கெராங், டோல்மா சம்பாங் ஆகிய இடங்களில் தானியங்கி கண்காணிப்பு நிலையங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. வானிலை ரேடார்கள் பாதிக்கப்படக்கூடிய ஏரிகளை சுற்றி பனிச்சரிவுகள் நிலச்சரிவுகள் அல்லது பிற நிகழ்வுகளை தூண்டக்கூடிய வானிலை நிலவரங்களை கண்காணிப்பதை மேம்படுத்துவதற்காக, டாப்ளர் வானிலை ரேடார்களை நிறுவவதற்கான இடங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்” என்று அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/after-nepals-deadly-flash-flood-are-sikkims-glacial-lakes-the-next-big-threat




