இந்தியாவின் நிலப்பரப்பை விண்வெளியில் இருந்து இன்னும் துல்லியமாகக் கண்காணிக்கும் வகையில் EOS-05 செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த செயற்கைக்கோள் இன்றுஅதிகாலை 2.55 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சீறிப் பாய்ந்த GSLV-F17 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிடப்பட்ட Sub-Geosynchronous Transfer Orbit (Sub-GTO)-ல் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இது இஸ்ரோவின் பயணத்தில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இஸ்ரோ - EOS-05 அப்படியென்ன இந்த EOS-05-ன் ஸ்பெஷல்? பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் நேரமும், செயற்கைக்கோள் பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரமும் சமமாக இருக்கும் வகையில் வடிவைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், புவி ஒத்திசைவு சுற்றுப்பாதை (Geosynchronous orbit)-லிருந்து இந்தியாவை துல்லியமாக கண்காணிக்க முடியும். பூமியிலிருந்து சுமார் 36,000 கி.மீ உயரமுள்ள, Sub-GTO-வில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோளின் பணி வெறும் புகைப்படம் எடுப்பதோடு முடிந்துவிடாது. Visible (கண்ணுக்குத் தெரியும் ஒளி), Infrared (கண்ணுக்குத் தெரியாத வெப்ப ஒளி) Multispectral (குறிப்பிட்ட சில வண்ணக் கற்றைகள்) Hyperspectral (நூற்றுக்கணக்கான நுண்ணிய வண்ணக் கற்றைகள்) உள்ளிட்ட பல்வேறு அலைவரிசைகளில் படங்களைப் பதிவு செய்யும் திறன் இதற்கு உள்ளது. இதன் மூலம் பூமியின் நிலப்பரப்பு, தாவரங்கள், நீர்நிலைகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகக் கண்காணிக்க முடியும். EOS-05 விவசாயம் முதல் பேரிடர் மேலாண்மை வரை! EOS-05 மூலம் கிடைக்கும் தரவுகள் பல்வேறு துறைகளுக்கு பயன்படும். குறிப்பாக வெள்ளம், புயல், காட்டுத்தீ போன்ற பேரிடர்களைக் கண்காணிக்க இந்தத் தொழில்நுட்பம் உதவக்கூடும். மேலும், முழு இந்திய நிலப்பரப்பையும் குறுகிய இடைவெளிகளில் கண்காணிக்கும் திறன் இருப்பதால், வேகமாக மாறும் சூழல்களை உடனுக்குடன் கவனிப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கும். GSLV-க்கும் முக்கியமான வெற்றி! இந்த மிஷன் EOS-05-க்கு மட்டுமல்ல, GSLV ராக்கெட்க்கும் ஒரு முக்கிய மைல்கல். இது GSLV-யின் 19-வது மிஷன். மேலும், GTO அல்லது Sub-GTO சுற்றுப்பாதைக்கு GSLV மூலம் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் EOS-05 அதிக எடை கொண்டது என்பது குறிப்பிடதக்கது. இஸ்ரோ இஸ்ரோவின் இந்த வெற்றிக்குப் பிறகு, அடுத்த பெரிய கவனம் ககன்யான் (Gaganyaan) திட்டத்தின் மீது இருக்கிறது. இந்த ஆண்டுக்குள் முதல் ஆளில்லா Gaganyaan மிஷனை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த நிதியாண்டில் NVS-03 உள்ளிட்ட மேலும் 6 ஏவுதல்களை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/science/the-waves-05-satellite-was-launched-into-space-from-isro-early-this-morning


