கேப்டவுன், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியுள்ளது. கடைசி ஒருநாள் போட்டி இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. போட்செப்ஸ்ட்ரூம் மைதானத்தி இந்திய நேரப்படி நாளை மாலை 5 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற தென் ஆப்பிரிக்காவும், ஆறுதல் வெற்றிபெற ஆஸ்திரேலியாவும் போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/last-odi-south-africa-vs-australia-clash-tomorrow




