இந்தி பிக்பாஸ் சீசன் 20-ன் சமீபத்திய 'வீக்கெண்ட் கா வார்' (Weekend Ka Vaar) எபிசோட் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் பிரபல பாலிவுட் நடிகருமான சல்மான் கான், சமூக வலைதளங்களில் பிரபலங்களை இலக்கு வைத்து அவதூறு பரப்புபவர்கள் மற்றும் 'ட்ரோல்' (Troll) செய்பவர்களைக் கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார். கடந்த வாரம் போட்டியாளர்கள் ஸ்காட் ஓபி மற்றும் அரிஷ்பா கான் (Arishfa Khan) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, இருவரும் ஒருவரது தொழிலை மற்றவர் தாழ்த்திப் பேசியதைச் சுட்டிக்காட்டி சல்மான் கான் கண்டனம் தெரிவித்தார். சல்மான் கான் அதனைத் தொடர்ந்து, இணையதளங்களில் போலிக் கணக்குகள் மூலம் பிறரைத் தூற்றும் நபர்களின் செயல்பாடுகளை விமர்சித்த சல்மான் கான், ``இன்று பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறந்த தளமாக சமூக வலைதளம் உள்ளது. ஆனால், அதில் ஒரு சிலர் பிறரைத் தாழ்த்திப் பேசுவதன் மூலமே பணம் சம்பாதிக்கிறார்கள். தங்கள் சொந்த முகத்தையோ, அடையாளத்தையோ வெளிப்படுத்தப் பயப்படும் கோழைகளே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். ஒருவர் எப்படி இருக்கிறார், அவரது எடை, தோற்றம், குடும்பம் மற்றும் சிரிப்பைக்கூடக் கேலி செய்கிறார்கள். பிறரின் தோல்வியைக் கொண்டாடுவதிலும், உருவக் கேலி செய்வதிலும் இவர்களுக்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை. ஒரு பெண் தாயாகும்போது உடல் எடை அதிகரிப்பது இயல்பான ஒன்று. பிரசவத்திற்குப் பின் குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புவது அவரது உரிமை. மீண்டும் படப்பிடிப்பிற்கு வரும்போது அவர் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார். கத்ரீனா கைஃப் இதற்கெல்லாம் ட்ரோல் செய்வது மிகவும் அருவருப்பானது. என்னைக்கூட 60 வயதாகிவிட்டது, கிழவன் ஆகிவிட்டான் என்று கூறுகிறார்கள். 'மைனே பியார் கியா' காலத்தில் இருந்தது போலவே எப்போதும் இருக்க முடியாது." என ஆவேசமாகப் பேசியபடி, சட்டையைக் கழற்றினார். சமீபத்தில் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை கூடியதற்காக இணையத்தில் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு ஆதரவாக சல்மான் கான் குரல் கொடுத்திருப்பது, தற்போது இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது. கத்ரீனா கைஃப்: பிரசவத்திற்குப் பின் எதிர்கொண்ட உருவக் கேலி; ₹350 கோடி பிராண்ட் மூலம் பதிலடி! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/viral/actor-salman-khan-suddenly-taking-off-his-shirt-has-gone-viral



