காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்திக் இவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் பாலரக்ஷனா (வயது 16) காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வந்தார். விடுதி இந்த நிலையில் இன்று காலை விடுதியில் உள்ள அறையில் இருந்து மாணவி பாலரக்ஷனா வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவி மற்றும் ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி பாலரக்ஷனா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாக்ஷனா பரிதாபமாக இறந்தார். விசாரணை இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசரார் மாணவியின் உடலை. மீட்டு பிரேத பரிசோதணைக்காக காஞ்சிபுரம் அரசு அனுப்பி ஆஸ்பத்திரிக்கு வைத்தனர். மாணவியின் தற்கொலை முடிவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவர் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி அவருக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அவருடன் கடைசியாக பேசியது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/kanchipuram-student-commits-suicide-by-hanging-herself-in-school-hostel




