சென்னை, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் காஜல் அகர்வால். 'பழனி', 'நான் மகான் அல்ல', 'மாற்றான்', 'துப்பாக்கி', 'ஜில்லா', 'விவேகம்', 'கோமாளி', 'இந்தியன் 2' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ள அவர், திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'தி இந்தியா ஸ்டோரி' படத்தில் காஜல் தற்போது சாகர் பி. ஷிண்டே தயாரிப்பில், டி.கே. சேட்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஷ்ரேயாஸ் தல்படேவுடன் இணைந்து நடித்துள்ளார். ஜீ ஸ்டூடியோஸ் வெளியிடும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் குறித்து மனம் திறந்த காஜல் அகர்வால் இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பெருமிதத்துடன் பேசியுள்ளார். அவர் கூறுகையில், "விஜய் முதலமைச்சரானது எனக்கு மிகுந்த பெருமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அவர் எப்போதும் பெரிய விஷயங்களை சாதிப்பதற்காகவே பிறந்தவர், திரையிலும், நிஜ வாழ்க்கையிலும் விஜய் மிகவும் எதார்த்தமான மனிதர். அவரது அரசியல் பயணம் எனக்கு 100 சதவீதம் உற்சாகத்தை அளிக்கிறது," என்றார். "அவருக்கு வாக்களித்திருக்க வேண்டும்" மேலும், "நானும் தமிழ்நாட்டில் வாக்காளராக இருந்து அவருக்கு வாக்களித்திருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்," என காஜல் அகர்வால் கூறியுள்ளார். காஜல் அகர்வாலின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/i-wish-i-had-voted-for-vijay-actress-kajal-aggarwal




