போர்ட் ஆப் ஸ்பெயின், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று முன் தினம் தொடங்கியது. கரீபியனில் உள்ள டிரினிடாட் & டொபாகோ குடியரசு நாட்டின் பிரையன் லாரா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 311 ரன்களுக்கு ஆல் அவுட் இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாய் ஹோப் 92 ரன்களும், கவெம் ஹட்ஜ் 84 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் முகமது அலி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் 199/3 இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் இமாம் உல் ஹக் 63 ரன்களுக்கு அவுட் ஆனார். அதேவேளை, அந்த அணியின் ஷான் மசூத் 88 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போதைய நிலவரப்படி, முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 112 ரன்கள் முன்னிலையில் உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/test-against-west-indies-pakistan-199-3




