சென்னை, உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணியின் முன்கள வீரர் போலரின் பலோகனுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சிவப்பு அட்டை கடந்த புதன்கிழமை நடந்த ரவுண்ட் ஆப் 32 சுற்றில் அமெரிக்கா - போஸ்னியா அணிகள் மோதின. இப்போட்டியில் அமெரிக்க வீரர் போலரின் பலோகனுக்கு நேரடி சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. பிபா உலகக் கோப்பை விதிமுறையின்படி, நேரடி சிவப்பு அட்டை பெற்ற வீரர் அடுத்த போட்டியில் விளையாட முடியாது. இதனால் பெல்ஜியத்திற்கு எதிரான 'சுற்று-16' (Round of 16) போட்டியில் அவர் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. டிரம்ப் தலையீட்டால் மாற்றமா? இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிபா தலைவர் கியானி இன்பான்டினோவை நேரடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பலோகனின் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை மறுபரீசிலனை செய்த பிபா பெல்ஜியத்திற்கு எதிரான 'சுற்று-16' (Round of 16) போட்டியில் பலோகன் விளையாடுவதற்கு பிபா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிபா ஒழுங்குமுறை விதி எண் 27-இன்படி, போலரின் பலோகனுக்கு விதிக்கப்பட்ட ஒரு போட்டி தடை, ஓராண்டு நன்னடத்தை (Probationary Period) அடிப்படையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஓராண்டு காலத்தில் பலோகன் மீண்டும் இதேபோன்ற கடுமையான ஒழுங்கீனத்தில் ஈடுபட்டால், தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தடை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அதனுடன் புதிய தவறுக்கான தண்டனையும் சேர்த்து வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. பெல்ஜியத்திற்கு எதிராக பலோகன்? இதன் மூலம், சியாட்டிலில் உள்ள லுமேன் பீல்ட் மைதானத்தில் பெல்ஜியத்திற்கு எதிராக நாளை நடைபெறவுள்ள உலகக் கோப்பை 'சுற்று-16' நாக்-அவுட் போட்டியில் பலோகன் அமெரிக்க அணிக்காக களமிறங்குவார் என எதிபார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/football/fifa-wc-fifa-suspends-usa-forward-folarin-baloguns-one-game-ban




