லாகூர், பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ஷான் மசத் நீக்கப்பட்டு மீண்டும் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், வாரிய முன்னாள் தலைவருமான ரமீஸ் ராஜா அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 'ஷான் மசத்திடம் ஒரு சாதாரணமான டெஸ்ட் அணியை கொடுத்து விட்டு அவர் எப்படி நல்ல முடிவை தருவார் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் அவர் இடத்தில் இருந்து இருந்தால் கேப்டனுக்கு தொடர்ச்சியாக சாதாரணமான வீரர்கள் கொண்ட ஒரு அணியை கொடுக்கும் போது எப்படி சாதகமான முடிவை எதிர்பார்க்க முடியும் என்று எழுத்துபூர்வமாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பேன். டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தரம் நன்றாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் மோசமான செயல்பாடுக்கு கேப்டன் மட்டும் எப்படி பொறுப்பாவார்' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/babar-azam-appointed-test-captain-former-pakistan-player-expresses-dissatisfaction




