"அதற்கு எங்களுடைய வாழ்த்துகள்."- சபாநாயகரை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "இந்த அவையை முடிந்த அளவுக்கு நீங்கள் (சபாநாயகர்) சிறப்பாக வழி நடத்தி செல்கிறீர்கள். எங்களுக்கும் கேள்வி கேட்பதற்கான வாய்ப்பையும் நீங்கள் தருகிறீர்கள். எங்களை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு தருகிறீர்கள். ஆனால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாமல் எங்கள் மீது குற்றச்சாட்டை வைக்கிறார்கள். அப்படி அவர்கள் பேசும்போது அவைக்குறிப்பில் இருந்து அதை நீங்கள் நீக்கவும் செய்திருக்கிறீர்கள். சபாநாயகர் JCD பிரபாகர் வரலாற்றிலேயே எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசியதை விட அதிகமாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதை நீங்கள் தான் அவைக்குறிப்பில் இருந்து முதன்முதலாக நீக்கி இருக்கிறீர்கள். அதற்கு எங்களுடைய வாழ்த்துகள். அவை நிகழ்ச்சி எல்லாம் நேரலையில் ஒளிபரப்பப்படுகிறது. கேள்விகள் கேட்டால் நாங்களே ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு பதில் சொல்கிறார்கள். இப்போது பாட்டெல்லாம் பாடுகிறார்கள். எங்களுக்கே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோமா என்று சந்தேகப்படும் அளவிற்கு பாட்டு நிகழ்ச்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது. இதை நீங்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும் சமூக வலைதளங்களில் ரீல்ஸாக ஷேர் செய்யப்படுகிறது. உங்கள் பார்வைக்கு மீண்டும் இதைக் கொண்டு வருகிறேன்" என்று பேசியிருக்கிறார். "மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்"- எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 21) நிதிநிலை அறிக்கை, நீதி, சிறை, சட்டம், எரிசக்தி அறநிலையத்துறைக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, " எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீன்கள் கொத்து கொத்தாகச் செத்து மிதக்கிறது. கழிவுகள் ஆற்றில் கலப்பதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/august-21-st-tn-assembly-live-update




