வாஷிங்டன், மார்வெல் யூனிவெர்ஸ் திரைப்பட வரிசையில் புகழ்பெற்ற ‘எக்ஸ் மென்’ (X-Men) கதாபாத்திரங்கள் இணைய உள்ளன. மார்வெல் காமிக்ஸ் புத்தகங்களில் இடம்பெற்ற ‘எக்ஸ் மென்’ கதாபாத்திரங்கள், மரபணு மாற்றத்தால் அபார சக்திகளைப் பெற்ற சூப்பர் ஹீரோக்களாக திகழ்கின்றனர். 1980-களில் இந்த கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியான காமிக்ஸ் கதைகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. தொடர்ந்து 1993-ம் ஆண்டு ‘எக்ஸ் மென்’ கதாபாத்திரங்களை திரைப்படமாக்கும் உரிமையை ‘பாக்ஸ் ஸ்டூடியோஸ்’(Fox Studios) நிறுவனம் பெற்றது. அதைத் தொடர்ந்து ‘எக்ஸ் மென்’ திரைப்பட வரிசையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள், ஸ்பின் ஆப்(Spin off) கதைகள் ஆகியவை வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மார்வெல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ‘எம்.சி.யு.’(MCU) சூப்பர்ஹீரோ யூனிவர்ஸ் திரைப்படங்களில் ‘எக்ஸ் மென்’ கதாபாத்திரங்கள் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், புதிய நடிகர், நடிகைகளுடன் ‘எக்ஸ் மென்’ ரீபூட்(Reboot) திரைப்படம் வெளியாகும் என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. டிஸ்னி டி23 நிகழ்வில் இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய ‘எக்ஸ் மென்’ திரைப்படம் வரும் 2028-ம் ஆண்டு மே 5-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ‘அப்செஷன்’ திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை இண்டி நவரெட் ‘ரோக்’(Rogue) கதாபாத்திரத்திலும், ‘ஸ்பைட்ர் மேன்’, ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ புகழ் நடிகை சேடி சிங்க் ‘ஜீன் கிரே’(Jean Grey) கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/cinema/cinemanews/x-men-movie-being-revived-actresses-from-obsession-and-spider-man-announced-to-be-part-of-the-cast




