புதுடெல்லி, இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டான கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து 'வீடுதோறும் மூவர்ணக்கொடி' என்ற இயக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன்படி, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ணக்கொடி ஏற்ற வேண் டும். நடப்பாண்டுக்கான 'வீடுதோறும் மூவர்ணக்கொடி இயக்கம் நேற்று தொடங்கி, 17-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி, பிரதமர் மோடி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது: -நமது மூவர்ணக்கொடிதான் நமது பெருமை. நாட்டுக்கு சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்பதற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக் கிறது. 'வீடுதோறும் மூவர்ணக்கொடி' இயக்கத்தில் ஆர்வமாக பங்கேற்போம். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைப்பதற்கான பங்களிப்பை அளிக்க கூட்டாக உறுதி ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/hoist-the-tricolour-at-every-home-pm-modis-call




