உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, "வான்வெளி புகைப்படங்களை அனுப்பி ஈரானுக்கு ரஷ்யா போரில் உதவுகிறது" என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜெலன்ஸ்கியின் கூற்று குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவரது பதில். "அது உண்மையா என்று நாம் தெரிந்துகொள்வோம். நான் புதினிடமே இதைப் பற்றி நேரடியாகக் கேட்பேன். உண்மை வெளிச்சத்திற்கு வரும். ஆனால், அது (உண்மையென்றாலும்) பெரியளவில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏனென்றால் நாம் ஈரானை அடித்து நொறுக்கிவிட்டோம். ரஷ்யா, வெனிசுலாவிற்கு ஏராளமான ராணுவத் தளவாடங்களைக் கொடுத்தார்கள். ட்ரம்ப் - புதின்Houthi Vs சவுதி அரேபியா - மத்திய கிழக்கில் இன்னொரு மோதல்; உலக பொருளாதாரத்திற்கு மீண்டும் ஆபத்து? வெனிசுலாவிடம் எல்லாமே ரஷ்யத் தயாரிப்புகளாகத்தான் இருந்தன. ஆனால் அதன் பலன் என்னவாக இருந்தது? பெரியளவில் பலனளிக்கவில்லை. ஈரானுக்கும் ரஷ்யா ஆதரவு அளித்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்திருந்தாலும் அது எந்தப் பலனையும் தரவில்லை. ஏனென்றால், ஈரானிடம் ராணுவமும் இல்லை, விமானப்படையும் இல்லை, கடற்படையும் இல்லை, எதுவுமே இல்லை. ரஷ்யா அப்படிச் செய்கிறது என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாகப் பெரியளவில் செய்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே செய்திருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை" போர்களில் ஈரானுக்கு உதவும் ரஷ்யா; ரஷ்யாவிற்கு உதவும் ஈரான்: எப்படி? உண்மையை உடைக்கும் ஜெலன்ஸ்கி? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/government-and-politics/trump-says-he-will-ask-putin-about-alleged-iran-military-support




