சென்னை தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 21 மாவட்டங்கள் இந்த நிலையில், தமிழகத்தில் 21 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், மதுரை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மித முதல் லேசான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று, தமிழகத்தின் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், நீலகிரி, திருப்பூர் மற்றும் வேலூர் ஆகிய 12 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/weather/chance-of-rain-until-10-pm-in-21-districts




