நகரி, தெலுங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத்தை சேர்ந்தவர் புர்ஹானுத்தீன் (வயது 50). இவருக்கு சபியா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கொலை கடந்த 2 நாட்களாக புர்ஹானுத்தீனை தொடர்பு கொள்ள முடியாததால், அவரது உறவினர் ஜஹீர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியது. பின்னர் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, புர்ஹானுத்தீன் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. வழக்குப்பதிவு இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜஹீர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, சபியா அவரை கொலை செய்து, பிளாஸ்டிக் பையில் வைத்துவிட்டு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மனைவியை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/a-gruesome-incident-where-a-husband-was-killed-and-his-body-wrapped-in-a-plastic-bag




