சென்னை, கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 2025 ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்கள் மத்தியில் பேசினார். விஜய்யை காணும் ஆவலில் பலர் முண்டியடிக்க கூட்டம் அங்குமிங்குமாக அலைமோத தொடங்கியது. இதில் திடீரென ஏற்பட்ட நெரிசலில் ஒருவரையொருவர் தள்ளியபடி நிலை தடுமாறினர். யாரும் எதிர்பாராத இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அப்போதைய தமிழக அரசு, த.வெ.க. என பல்வேறு தரப்பினரால் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை தற் போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. கால சுழற்சியில் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்று இன்று ஓராண்டாகி விட்டது. ஆனால் மனக்காயம் மட்டும் ஆறவில்லை. அந்த நெரிசல் சம்பவம் கரூர் மக்கள் மனதில் மறையாத வடுவாக மாறிப்போனது. இந்த நிலையில், கரூர் துயர சம்பவம் முதலாம் ஆண்டும் நினைவு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம். இதே நாள். அதாவது 2025 செப்டம்பர் 27. என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும். நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம். நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/karur-tragedy-we-are-bearing-an-unspeakable-sorrow-chief-minister-vijay




