பெங்களூரு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, உள்நாட்டு கிரிக்கெட்டில் அரிய மைல்கல்லை எட்டியுள்ளார். 2 விக்கெட்டுகள் பெங்களூருவில் துலீப் டிரோபி அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டல - கிழக்கு மண்டல அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் கிழக்கு மண்டல அணியின் ஷமி 16 ஓவர்கள் பந்துவீசி யாஷ் ரத்தோர் மற்றும் அர்ஷத் கான் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அர்ஷத் கானின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் முதல்தர, லிஸ்ட்-ஏ மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வடிவங்களையும் சேர்த்து தனது தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையில் 900 விக்கெட்டுகளை ஷமி நிறைவு செய்தார். 6-வது பந்து வீச்சாளர் இதன் மூலம் தொழில்முறை கிரிக்கெட்டில் 900 விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 266 ரன்களுக்கு ஆல்-அவுட் மத்திய மண்டல அணியின் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டல அணி சிறப்பாக பந்துவீசி, அந்த அணியை 266 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்தது. தற்போது கிழக்கு மண்டல அணி 3 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களுடன் விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/mohammed-shami-mohammed-shami-achieves-a-rare-feat-entry-into-the-900-wicket-club




