வாஷிங்டன், ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சர்வதேச மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், வழக்கம் போல் காஷ்மீர் பிரச்சினையை மீண்டும் கையில் எடுத்து பேசினார். டிரம்புக்கு நன்றி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது உரையில், காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார். மேலும், எல்லையில் அரங்கேறிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தடுத்து நிறுத்தியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு உலக மேடையில் நன்றி தெரிவித்து கொண்டார். இந்தியா கொடுத்த பதிலடி பாகிஸ்தான் பிரதமரின் இந்த உரைக்கு, இந்தியா அடுத்த சில நிமிடங்களிலேயே மேடையிலேயே மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்தது. ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகத்தின் முதன்மை செயலாளர் பெடல் கெலாட் பேசியதாவது:- பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் “சர்வதேச நாடுகள் அனைத்தும் நன்றாக அறிந்த ஒன்று, உலக அளவில் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாகவும், ஆபத்தான பயங்கரவாதிகளின் புகலிடமாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது. உலகையே உலுக்கிய 9/11 இரட்டைக்கோபுர தாக்குதலின் சூத்திரதாரி ஒசாமா பின் லேடனை, தனது நாட்டின் முதன்மை ராணுவ அகாடமிக்கு அருகிலேயே பல ஆண்டுகள் ஒளித்து வைத்து காப்பாற்றியதுதான் பாகிஸ்தானின் அசல் முகம். பொம்மை அரசு பாகிஸ்தானில் இன்று மக்களாட்சி நடப்பதாக கூறுவது முற்றிலும் பொய். அது முழுக்க முழுக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பொம்மை அரசாங்கம் ஆகும். அங்கு முகங்கள் மாறலாம், ஆனால் நிழல் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதை உலகம் நன்றாகவே அறியும். தனது நாட்டில் உள்ள சொந்த மக்களை கூட காப்பாற்ற முடியாத பாகிஸ்தான், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட முயல்வது கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதம் காஷ்மீர் என்பது இந்தியாவின் பிரிக்க முடியாத, இறையாண்மைக்கு உட்பட்ட ஒரு பகுதி. அதில் தலையிட பாகிஸ்தானுக்கு எள்வளவும் தகுதி கிடையாது. இந்தியாவின் எல்லையை தாண்டி தொடர்ந்து பயங்கரவாதத்தை ஏவிவிட்டு, நாட்டின் அமைதியை குலைக்க பாகிஸ்தான் முயன்றால், இந்தியா தனது தற்காப்பு உரிமையை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் மிக கடுமையான முறையில் பதிலடி கொடுக்கும். இதற்கான கடுமையான விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும்" என்று பெடல் கெலாட் எச்சரித்தார். சர்வதேச தலைவர்கள் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமரின் பொய்களை உடைத்தெறிந்து, இந்திய பெண் அதிகாரி பெடல் கெலாட் விடுத்த இந்த எச்சரிக்கை ஒட்டுமொத்த ஐ.நா. சபையையும் அதிர வைத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/world/india-warns-pakistan-at-united-nations




