பெங்களூரு, பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில், முன்னாள் கல்லூரி நண்பன் கொடுத்த வாட்ஸ்-அப் மிரட்டலுக்கு பயந்து, 22 வயது இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நகைக் கடை ஊழியர் சிவமோகா மாவட்டம் சாகர் தாலுகாவை சேர்ந்தவர் வாணிஸ்ரீ (வயது 22). இவர் பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் செக்டார்-1 பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கி, அங்குள்ள ஒரு பிரபல நகை கடையில் விற்பனை பிரிவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.வாணிஸ்ரீ சிவமோகாவில் படித்தபோது, அவரோடு அபிஷேக் என்ற வாலிபரும் ஒன்றாக படித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நண்பர்களாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆசைக்கு இணங்க மிரட்டல் படிப்பை முடித்த பின்னர் வாணிஸ்ரீ வேலைக்காக பெங்களூரு வந்த நிலையிலும், அபிஷேக் அவரை தொடர்ந்து மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், வாணிஸ்ரீயின் சில தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது கைவசம் வைத்திருந்த அபிஷேக், அவற்றை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். தன்னை நேரில் வந்து சந்தித்து, தனது ஆசைக்கு இணங்குமாறு வாணிஸ்ரீயை கட்டாயப்படுத்தி வாட்ஸ்-அப் மூலம் தொடர்ந்து பிளாக்மெயில் செய்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வாணிஸ்ரீ, யாரிடமும் சொல்ல முடியாமல் தவித்து வந்தார். ஏரியில் குதித்து தற்கொலை இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை காலையில் விடுதியிலிருந்து வெளியேறிய வாணிஸ்ரீ நீண்ட நேரமாகியும் வேலைக்கு செல்லவில்லை. இதற்கிடையே, அவர் தங்கியிருந்த விடுதி அறையில் ஒரு தற்கொலை கடிதம் இருப்பதை அவரது அறை தோழி கண்டுபிடித்தார். அந்தக் கடிதத்தில், "எனது மரணத்திற்கு அபிஷேக் தான் காரணம். அவன் எனது புகைப்படங்களை வைத்து என்னை மிரட்டுகிறான். குடும்ப மானத்தை காப்பாற்றவே நான் இந்த முடிவை எடுக்கிறேன். தற்கொலை கடிதம் அவனுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்" என்று வாணிஸ்ரீ உருக்கமாக எழுதியிருந்தார்.இதனால் அதிர்ச்சியடைந்த தோழி, வாணிஸ்ரீயின் சகோதரி பூஜாவிற்கும் விடுதி உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் உடனடியாக போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். வாலிபருக்கு வலைவீச்சு புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள அகரா ஏரி கரையில் வாணிஸ்ரீயின் செருப்புகள் கிடப்பதை கண்டெடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் மீட்புக்குழுவினர் ஏரிக்குள் இறங்கித் தேடியதில், வாணிஸ்ரீயின் உடல் பிணமாக மீட்கப்பட்டது. அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்கொலைக்கு காரணமான, தற்போது தலைமறைவாக இருக்கும் வாலிபர் அபிஷேக்கைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக தேடி வருகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/india/jewellery-shop-woman-employee-dies-by-suicide-jumping-into-lake




