மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ‘ஐ அம் கேம்’. ‘ஆர்.டி.எக்ஸ்’ படப்புகழ் நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த்திவ் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. துல்கர் சல்மான் நடிகை சம்யுக்தா பற்றி. அதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் துல்கர் சல்மான், ``நடிகை சம்யுக்தா மேடைகளில் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் அவர்களது நேர்மறையான ஆற்றலும் உள்ளிருக்கும் நல்லெண்ணமும் இயல்பாகவே வெளியே தெரியும். திறமையும் பேரழகும் கொண்ட அவர், மிகுந்த அறிவுக்கூர்மையுடையவராகவும் திகழ்கிறார். எப்போதும் புன்னகையுடனும் நேர்மறை எண்ணங்களுடனும் மட்டுமே காணப்படும் அவர், இந்தப் படத்தில் தனது பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மிஷ்கின் பற்றி. இயக்குநர் மிஷ்கின் களத்தில் இறங்கிவிட்டாலே அங்கிருக்கும் சூழலே மாறிவிடும். அவர் அங்குதான் இருக்கிறார் என்பதை அனைவராலும் உணர முடியும். அந்த அளவிற்குத் தன்னுடன் ஒரு தனி ஆற்றலைக் கொண்டுவரக்கூடியவர். இந்தப் படத்தில் அவருக்கு மிகச் சுவாரசியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. தனது உடல்மொழியையும், முகபாவனைகளையும் மிக சிறப்பாகப் பயன்படுத்தி, இந்த சவாலான கதாபாத்திரத்தை மிகவும் ரசித்துச் செய்துள்ளார். திரையில் அவரது இந்த நடிப்புப் பங்களிப்பைக் காண மிகவும் ஆவலாக இருக்கிறது. மிஷ்கின் காயடு லோஹர் பற்றி. நடிகை காயடு லோஹர் குறித்து இயக்குநர் மிஷ்கின் சார் குறிப்பிடும்போது, "அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவரைப் என் படத்தில் ஒப்பந்தம் செய்யவில்லை" என்று கூறியிருந்தார். ஆனால், அந்த அழகு சில நேரங்களில் அவரது திறமைக்கு ஒரு சிறிய தடையாகத் தெரிந்தாலும், அவர் அடிப்படையில் ஒரு மிகச்சிறந்த நடிப்புத் திறமை கொண்டவர். இந்தியாவின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஒரு தமிழ்ப் பெண்ணாகவோ, தெலுங்கு அல்லது மலையாளப் பெண்ணாகவோ மிக இயல்பாகப் பொருந்திவிடக்கூடிய அபார ஆற்றல் அவருக்கு இருக்கிறது. அந்த உள்ளூர்த் தன்மையே அவரது மிகப்பெரிய பலம். இந்தப் படத்திற்கு அவர் அளித்திருக்கும் பங்களிப்பு படத்திற்கு மேலும் வலிமை சேர்த்துள்ளது." என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.vikatan.com/trending/viral/dulquer-salmaan-talk-about-kayadu-lohar-at-im-game-movie-event


