சென்னை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது:- தி.மு.க.வின் மீது குதிரைபேர குற்றச்சாட்டை சுமத்தி மக்கள் மத்தியில் அவதூறு பரப்ப வேண்டும் என்ற த.வெ.க. அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கின் மூலமாக நீதிமன்றத் தால் விஜய் அரசினுடைய மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு வந்து 55 நாட்களை கடந்தும் நிர்வாகத்தைப் பற்றி கவலைப்படாத த.வெ.க. அரசு தினந்தோறும் தி.மு.க.வின் மீது எந்த குற்றங்களை சுமத்தலாம் என்று சிந்தித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையை அரங்கேற்றி வருகிறது. அந்த வகையில்தான் அனிதா ராதாகிருஷ்ணனிடம் விசாரணையின்போது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யுங்கள். த.வெ.க.வில் இணைய பணம் தருகிறோம் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். காவல்துறையை வைத்து மிரட்டி கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலையை த.வெ.க. அரசு செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/news/tamilnadu/they-are-recruiting-people-into-the-tmc-by-threatening-them-through-the-police-dmk-joint-secretary-of-law-department-paranthaman




