திண்டுக்கல், இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி சேலம் ஸ்பாட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. டிஎன்பிஎல் 10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ், மதுரை பாந்தர்ஸ் மோதின. இப்போட்டிக்கான டாஸை வென்ற சேலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, மதுரை பாந்தர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. 195 ரன்கள் குவித்த மதுரை தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சித்தார்த் மகாதேவன் 60 ரன்கள் விளாசினார். ராம் குமார் 36 ரன்களும், அதீக் உர் ரஹ்மான் 39 ரன்களும், சரவணன் 19 ரன்களும் எடுத்தனர். 196 ரன்கள் இலக்கு இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் எம். முகமது 30 ரன்களும், ராஜேந்திரன் விவேக் 28 ரன்களும், ஆர். கவின் 22 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Questo è un riassunto in tamil per una lettura veloce. Per il resoconto completo, il contesto e gli aggiornamenti, apri l’editore originale.
Leggi articolo completo
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-madurai-panthers-defeat-salem-by-36-runs




